“நான் உயிரோடதான் இருக்கேன்…” ரேஷன் கார்டில் நடந்த குளறுபடி… அரசு அதிகாரிகளை நேரில் வந்து அலறவிட்ட மாஸ் பாட்டி…வைரல் வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் உயிரோடதான் இருக்கேன்…” ரேஷன் கார்டில் நடந்த குளறுபடி… அரசு அதிகாரிகளை நேரில் வந்து அலறவிட்ட மாஸ் பாட்டி…வைரல் வீடியோ…!!

Published

on

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், உயிருடன் இருக்கும் முதியவர் ஒருவர் ரேஷன் கார்டு சரிபார்ப்புக்காகக் கைரேகை வைக்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தரவுத்தளத்தில் பதிவாகியிருந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாண்டவபுரா பகுதியைச் சேர்ந்த கிரியம்மா என்ற அந்தப் பெண்மணி, தனது கைரேகையைப் பதிவு செய்யச் சென்றபோது, அதிகாரிகள் கணினிப் பதிவுகளைக் காட்டி அவர் இறந்துவிட்டதாகக் கூறி கைரேகையை ஏற்க மறுத்துவிட்டனர். அத்துடன் அதிகாரிகளின் இந்தத் தவறான பதிவினால் அவரது ரேஷன் கார்டும் ரத்து செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக அவருக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் பொருட்களும் நிறுத்தப்பட்டன.

தவறைச் சுட்டிக்காட்டியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தியதால், ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி நேரடியாகத் வட்டாட்சியர்அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “சாப்பிட உணவின்றிப் பசியோடு அலைந்து திரியும் தன்னை யாரும் மதிப்பதில்லை” எனக் கூறி அலுவலக வளாகத்திலேயே அவர் அதிகாரிகளை நோக்கிக் கோபமாகச் சத்தமிட்டார். முதியவரின் இந்த அதிரடிப் போராட்டத்தைத் தொடர்ந்து, விழித்துக்கொண்ட வட்டார நிர்வாக அதிகாரிகள், அவரது ரேஷன் கார்டு பிரச்சினையை உடனடியாகச் சரிசெய்து தருவதாக உறுதியளித்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in