LATEST NEWS
அய்யோ கொடுமையே..! கழுத்து தாலி ஈரம் கூட காயல… நொடிப் பொழுதில் தலைகீழாக மாறிய வாழ்க்கை! கணவர் கண்ணெதிரே நசுங்கிய புதுப்பெண்.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!
ஹைதராபாத் மலாக்பேட்டை சிக்னல் அருகே சனிக்கிழமை மதியம் நிகழ்ந்த கோர விபத்தில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வாகனம் நிலைதடுமாறியதில் அவர் சாலையில் தவறி விழுந்துள்ளார். அதே வேளையில் பின்னால் வந்த அரசுப் பேருந்தின் சக்கரங்களில் சிக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க நேரிட்டது.
திருமணமாகி வெறும் 41 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் இவ்வாறு உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த சாதர்காட் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
