LATEST NEWS
மணப்பெண் கோலத்தில் க்யூட்டான லுக்கில்.. அழகிய புகைப்படங்களை பகிர்ந்த செய்தி வாசிப்பாளர் பனிமலர்..!!
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அதாவது பிரியா பவானி சங்கர் மற்றும் அனிதா போன்ற பல செய்தி வாசிப்பாளர்களுக்கு தற்போது மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அதன்படி நியூஸ்7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வமும் ஒருவர். இவர் எதையோ எதிர்பார்த்து வந்த நிலையில் நியூஸ்7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதே சமயம் ஒரு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர்.
பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்ட இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து பெற்றார்.
தற்போது இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது புடவையில் தங்க நகைகள் அணிந்து அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.