BREAKING : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, IOB வங்கிகளை தனியார் மயமாக்க நிதி ஆயோக் பரிந்துரை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, IOB வங்கிகளை தனியார் மயமாக்க நிதி ஆயோக் பரிந்துரை…!!

Published

on

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 2 பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்க ஒன்றிய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. 2021-22 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, எந்த வங்கிகளைத் தனியார் மயமாக்குவது என்று தேர்வு செய்யும் பொறுப்பை நிதி ஆயோக்கிடம் அரசு ஒப்படைத்து இருந்தது.

தற்போது இந்த இரண்டு வங்கிகளையும் தனியார் மயமாக்குவதற்கான முதற்கட்டப் பரிந்துரைகளை நிதி ஆயோக் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கான சட்டத்திருத்தங்கள் மற்றும் நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in