LATEST NEWS
அடிப்பாவி..! ஃபாலோயர்களுக்காக 75 வயது முதியவருடன் போலி நிச்சயம்.. வைரல் வீடியோவால் ஓடிவந்த கணவர் – அம்பலமான 30 வயது பெண்ணின் வினோத நாடகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா பகுதியைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ரீனா ராஜ்புத் மற்றும் 75 வயது முதியவர் ராம்சுஹர் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த வினோத நிச்சயம், தற்போது ஒரு பெரிய இன்ஸ்டாகிராம் பப்ளிசிட்டி நாடகம் என வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 14 அன்று, 45 வயது வித்தியாசமுள்ள இந்த ஜோடியின் நிச்சயதார்த்த மற்றும் ஹல்தி சடங்கு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இருப்பினும், வீடியோ வைரலான சில நாட்களிலேயே முதியவர் ராம்சுஹர் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். சமூக ஊடகங்களில் பிரபலமடையவும், இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை அதிகரிக்கவும் தனது யூடியூபர் மகளின் பேச்சைக் கேட்டு இந்தத் திருமண நிச்சயம் போலியாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ரீனாவுடன் எந்தக் காதல் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையே, ரீனா ராஜ்புத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “திருமண பந்தயத்தில் எனக்கு விருப்பமில்லை” என்ற சினிமா பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்டதோடு, ஒரு புதிய விசித்திரமானத் தகவலையும் பகிர்ந்துள்ளார். இந்த நிச்சயதார்த்த வீடியோவை பார்த்துவிட்டு, நீண்ட நாட்களாகக் காணாமல் போயிருந்த தனது கணவர் தற்போது வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டதாகக் கூறி இந்த முதியவருடனான நிச்சயத்தை அவர் ரத்து செய்துள்ளார். ரீனாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் எண்ணிக்கை தற்போது 14,600-ஐத் தாண்டியுள்ளதால், இது முழுக்க முழுக்க ஃபாலோயர்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகம் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
