‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தன் கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள்…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தன் கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள்….

Published

on

இந்த காலகட்டத்தில் வெள்ளித் திரையை விட சின்னத்திரை தான்  மக்கள் மத்தியில் அதிகமாக  பார்த்து வருகின்றனர்.சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் புது புது தொடர்களும் ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றனர்.

வெள்ளித் திரையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்  நடிகர்களைக் கூட மக்கள் மறந்து விடுவார்கள்.ஆனால் சின்னத்திரையில் சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் நடிகைகள்  கூட மக்கள்  மனதில் நீங்கா இடம் பிடித்துயுள்ளனர்.

Advertisement

அந்த வகையில்  சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.அப்படி  சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக  ஒளிபரப்பான சீரியல் ‘ரோஜா’. இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பிரியங்கா. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.

ஆந்திரவில் பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் அங்கே படித்து முடித்தார். அதன் பிறகு தெலுங்கு  திரையுலகில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.2010-ஆம் ஆண்டு சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில்  வெளியான திரைப்படம் ‘அந்தாரி பந்துவையா’. இப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடிகை பிரியங்கா  நடித்திருந்தார்.

Advertisement

இவர்தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் ராகவா லாரன்ஸ்  இயக்கிய ‘காஞ்சனா 3’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.அதன் பிறகு ‘ரோஜா’சீரியல் மூலமாக  தனக்கான   ரசிகர் பட்டாளத்தை   உருவாக்கிக்  கொண்டுள்ளார்.

தற்போது ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும்’ சீதாராமன்’ என்ற மெகா தொடர் சீதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.நடிகை பிரியங்கா நல்காரி மலேசியாவில் முருகன் கோவிலில் திடீர் திருமணம் செய்து கொண்டார் .

Advertisement

ராகுல் வருமா என்னும் தொழிலதிபதனை பிரியங்கா நல்காரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது திருமணம் நடைபெறாமல் போனதாக சமூக வலை தளங்களில் செய்திகள் வைரலாக பரவியது.இந்நிலையில் பல தடைகளை தாண்டி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இன்ஸ்டாகிராமில் 707K followers  உள்ளனர்.

இவர் சமீபத்தில் தன் கணவருடன் கோயிலுக்கு சென்ற புகைப்படம் மற்றும் Photo shoot புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது  இந்த புகைப்படமானது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in