LATEST NEWS
“எல்லாம் போச்சு… அடுத்து என்ன பண்றது..?” – தொடர் தேர்தல் தோல்விகளால் விரக்தியின் உச்சத்தில் மௌனம் காக்கும் சீமான்..!!
கடந்த கால தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்று வந்த நாம் தமிழர் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இடைத்தேர்தல்களிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியது. குறிப்பாக, காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் உட்படக் கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியைச் சந்தித்தது கட்சிக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“எல்லாம் போச்சு… அடுத்து என்ன பண்றது?” – தொடர் தேர்தல் தோல்விகளால் விரக்தியின் உச்சத்தில் மௌனம் காக்கும் சீமான்! இத்தொடர் தோல்விகளாலும், பல ஆண்டுகளாக மக்கள் மத்தியிலும் களத்தில் குரல் கொடுத்தும் தங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லையா என்ற விரக்தியிலும் சீமான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் பொதுவெளியில் தலைகாட்டாமலும், செய்தியாளர்களைச் சந்திக்காமலும், கட்சி அலுவலகத்திற்குச் செல்லாமலும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனித்துப் போட்டியிடும் நிலையை மாற்றிவிட்டு, எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலிக்காவிட்டால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேறு கட்சிகளுக்குச் செல்லக்கூடும் என்ற எச்சரிக்கைகளால் சீமான் மேலும் நெருக்கடியையும் குழப்பத்தையும் சந்தித்து வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
