57 வயதில் 23 வயது இளம் பெண்ணுடன் இரண்டாம் திருமணம்… 7 மாசத்துல இப்படி ஆகிடுச்சே.. இதெல்லாம் தேவையா..?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

57 வயதில் 23 வயது இளம் பெண்ணுடன் இரண்டாம் திருமணம்… 7 மாசத்துல இப்படி ஆகிடுச்சே.. இதெல்லாம் தேவையா..??

Published

on

தென்னிந்திய திரை உலகின் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்த பப்லூ பிரித்விராஜ் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தார். இவர் ஹீரோவாக இருந்து அதன் பிறகு குணச்சித்திர நடிகராக மாறியவர். தற்போது ஒரு சில நல்ல திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். 57 வயதை கடந்துவிட்ட இவர் சமீபத்தில் தன்னைவிட 30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 23 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் இரண்டாவது திருமணம் செய்தது சர்ச்சையை கிளப்பியது.

இவரின் இரண்டாவது மனைவி மலேசியாவை சேர்ந்தவர். ஒரு நிகழ்ச்சிக்காக இவர் மலேசியா சென்று இருந்த நிலையில் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிய பிறகு அது காதலாக மலர இருவரும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பலரும் வெறுப்பை வெளிப்படுத்திய நிலையில் இவர்கள் இருவரும் அதனை கண்டு கொள்ளவில்லை. இவர் தனக்கு நல்ல மனைவியாக இருக்கிறார் என்றும் தன்னுடைய முதல் மனைவி தனக்கு ஏற்படுத்திச் சென்ற காயங்களை இவர் ஆற்றுகிறார் என பல சமயங்களில் பப்லு கூறினார்.

Advertisement

இந்த நிலையில் இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அடிக்கடி ஒன்றாக எடுக்கும் பல வீடியோக்களை பகிர்ந்து இணையதளத்தில் பல வரவேற்புகளை பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த ஜோடி பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்றாலும் தங்கள் சமூக ஊடக கணக்கில் இருந்து இருவரும் தாங்கள் ஒன்றாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என அனைத்தையும் அகற்றி உள்ளனர்.

மேலும் பப்லுவின் இரண்டாவது மனைவி சமூக வலைதள பக்கத்தில் இணையவாசி ஒருவர் நீங்கள் பிரிந்து விட்டீர்களா என கமெண்ட் இல் கேட்க அதற்கு அவர் லைக் செய்துள்ளார். ஆகையால் அவர்கள் இருவரும் பிரிந்தது உண்மைதான் என்று தற்போது இணையவாசிகள் முடிவுக்கு வந்துள்ளனர். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Continue Reading
Advertisement