திடீரென கணவரை பிரிந்த திரௌபதி நடிகை… அவரே வெளியிட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென கணவரை பிரிந்த திரௌபதி நடிகை… அவரே வெளியிட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்…!!

Published

on

ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் பூங்கொடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஷீலா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை சீரியல்களில் நடித்து வந்த நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சீரியலை விட்டு விலகி விட்டார். டூ லெட்என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தன. அதரைத் தொடர்ந்து அசுரவதம் மற்றும் மனுசங்கடா ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் கும்பலாக்கி நைட்ஸ் என்ற திரைப்படம் மூலம் மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்தார். குறிப்பாக இவர் நடித்த திரௌபதி மற்றும் மண்டேலா உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அழகிய தமிழ் மகள் சீரியலில் மிகவும் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

Advertisement

இந்த நிலையில் நடிப்பு பயிற்சி பள்ளி வைத்துள்ள சோழன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்ட வாழ்ந்து வந்தார். தற்போது இவர் திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன் என இன்று தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நன்றியும் அன்பும் சோழன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அவர் திருமண உறவில் இருந்து விலகுவதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. திரைத் துறையில் உள்ளவர்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து கொள்வது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

SANTHASHEELA S இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sheela14_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement