காந்தாராவுக்கு வெறும் 4 கோடி சம்பளம்.. 2-ஆம் பாகத்திற்கு ரிஷப் வாங்கும் சம்பளம் இவ்ளோவா..? ஆடிப்போன ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

காந்தாராவுக்கு வெறும் 4 கோடி சம்பளம்.. 2-ஆம் பாகத்திற்கு ரிஷப் வாங்கும் சம்பளம் இவ்ளோவா..? ஆடிப்போன ரசிகர்கள்..!!

Published

on

காந்தாரா திரைப்படத்தை கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ளார். தொன்மை கதையை மையமாக வைத்து காந்தாரா படம் இயக்கப்பட்டது. 1800-களில் குறுநிலராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டி நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

#image_title

ஆனால் அவரது சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இதன் மையக்கருத்து.  இந்த படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

#image_title

சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கும் இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்திற்கு முன் நடக்கும் கதையாக காந்தாரா 2 உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியது.

இதற்காக மங்களூரில் பிரம்மாண்ட செட் அமைந்துள்ளனர். அதிக செலவில் எடுக்கப்படும் இந்த படம் காந்தாரா chapter 1 என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

Advertisement

#image_title

இந்தப் படத்தில் நாயகனான ரிஷப் ஷெட்டியே இயக்கி நடிப்பதால் அவருக்கு தயாரிப்பு நிறுவனமான ஹெம்பலே பிலிம்ஸ் 100 கோடி ரூபாய் சம்பளமாக வழங்க ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கி நடிக்க ரிஷபுக்கு நான்கு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தை விட 25 மடங்கு அதிக சம்பளத்தை ரிஷப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#image_title

Continue Reading
Advertisement