LATEST NEWS
அட எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜான்சி ராணியா இது?… மிரட்டலான லுக்கில் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஜான்சி ராணி. இந்த சீரியலில் குணசேகரனுக்கு டப் கொடுக்கும் விதமாக ஜான்சி ராணி கேரக்டர் இடம் பிடித்துள்ளது. இவரின் நிஜ பெயர் காயத்ரி கிருஷ்ணன். இதற்கு முன்பு இவர் சமீபத்தில் வெளியான அயலி வெப்சீரிஸ் திரைப்படத்தில் மைதிலியின் அம்மாவாக நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதே சமயம் நடிகர் சிம்பு நடித்த பெரிய அளவில் வெற்றி பெற்ற வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்திலும் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இவருக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜான்சி ராணியாக பார்த்து வந்த இவ்வாறு தற்போது வேலு நாச்சியார் வேடம் போட்டு மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
