LATEST NEWS
மகாலட்சுமி கணவரா இப்படி?… 15 லட்சத்தை ஏமாற்றிய ரவீந்தர்… இணையத்தில் தீயாய் பரவும் செய்தி…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ரவீந்தர் சந்திரசேகர். இவர் தமிழில் நட்புனா என்ன தெரியுமா மற்றும் முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரை சினிமாவில் தயாரிப்பாளராக தெரிந்ததை விட பலருக்கும் பிக்பாஸ் விமர்சனராக தான் நன்றாக தெரியும். தற்போது பல திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்து வரும் ரவீந்தர் கடந்த வருடம் சீரியல் நடிகை மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்து கொண்டார்.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த வருடம் திருப்பதியில் இருவரும் திருமணம் முடித்தனர். தற்போது அடிக்கடி வெளியில் செல்லும் புகைப்படங்களை இவர்கள் பகிர்ந்து தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த விஜய் என்ற நபரிடம் ரவீந்தர் கடந்த வருடம் மே மாதம் நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் எனக் கூறி 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அமெரிக்காவை சேர்ந்த விசை தன்னிடம் 15 லட்சம் தான் உள்ளது என்று கூறி அதனை தான் இரண்டு தவணையாக அனுப்புவதாக கூறி முதலில் பத்து லட்சம் அதன் பிறகு 5 லட்சம் பணத்தை ரவீந்தர் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். அதன் பிறகு பணத்தை வாங்கிக் கொண்ட ரவீந்தர் ஒரே வாரத்தில் 16 லட்சம் ரூபாயாக திருப்பிக் கொடுக்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் ரவீந்தர் சொன்னபடி பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார்.
ரவீந்தரிடம் பணம் கேட்டதற்கு பல காரணங்களை சொல்லி ஒரு கட்டத்தில் அமெரிக்க நபர் விஜயின் செல்போன் நம்பரை பிளாக் செய்து உள்ளார். இதனால் விஜயின் மனைவி ரவீந்தரை தொடர்பு கொண்டு பணம் கேட்டபோது அவரை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ஆன்லைன் மூலமாக அமெரிக்காவில் இருந்து ரவீந்தர் பணம் கேட்டதற்கான ஆதாரம் மற்றும் அவர் பணம் கேட்டு பேசிய ஆடியோ அனைத்தையும் வைத்து சென்னை கமிஷனருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து புகார் தொடர்பாக ரவிந்தரிடம் விசாரித்தபோது தான் விஜய் இடம் 15 லட்சம் ரூபாய் வாங்கியது உண்மைதான் என்றும் ஆனால் அந்த பணத்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவதற்கு முடியாமல் விஜய் தன்னிடம் கொடுத்து வைத்ததாகவும் உறவினர்கள் வந்தால் தான் செக்கை கொடுத்து விடுவேன் என்று கூலாக பதில் அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
