LATEST NEWS
‘இளவரசி’ சீரியல் நடிகை சந்தோஷியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. வெளியான புகைப்படம்..
தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்வில் வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறிவிட்டது. குறிப்பாக சன் டிவியில் சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று’இளவரசி’.
இந்த சீரியலில் சந்தோஷி, மனுஷ் மன்மோகன், ரக்ஷிதா மகாலட்சுமி, யோகினி, வெற்றி வேலன், அகிலா, ரேவதி, பிரியா, ஸ்வப்னா போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர். இந்த சீரியலில் இளவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துமக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சந்தோஷி.
இவர் சென்னையில் பூர்வீகமாகக் கொண்டவர் .இவர் தந்தை கிருஷ்ண மூர்த்தி தாய் பூர்ணிமா இவர் ஒரு சீரியல் நடிகை. நடிகை சந்தோஷி. 8 வயதாக இருக்கும் போதே அம்மாவுடன் இணைந்து நாடகங்களில் நடித்துள்ளார்.
அதன் பிறகு ரஜினிகாந்த் மற்றும் மனீஷா கொய்ராலா ஆகியோரது நடிப்பில் வந்த’ பாபா’ என்ற படத்தில் சாமுண்டீஸ்வரியாக மனீஷா கொய்ராலாவுக்கு சகோதரியாக நடித்துள்ளார். அதை தொடர்ந்து ஆசை ஆசையாய், பாலா, உன்னிடம் சரணடைந்தேன், அன்பே அன்பே, யுகா, நினைத்தாலே, வீராப்பு, மரியாதை, பொற்காலம் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் நவ்தீப் ஜோடியாக 2004 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெய்’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சந்தோஷி படங்களில் வாய்ப்பு குறைந்த நிலையில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ருத்ர வீணை, அம்மு, அரசி, இளவரசி, சூரிய புதிரி, வாடகை வீடு, இல்லத்தரசி, மரகத வீணை, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பாவ மன்னிப்பு, பொண்டாட்டி தேவை, நம்பர் 23 மகாலட்சுமி நிவசம் போன்ற பல சீரியல்களின் நடித்துள்ளார்.
நடிகை சந்தோஷி தன்னுடன் நடிக்கும் நடிகரான ஸ்ரீகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இரட்டைப் பெண் குழந்தைகளும் உள்ளனர். நடிகை சந்தோஷி ‘plush studios’ என்ற youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார். youtube சேனல் 770 subscribers உள்ளனர். தற்போது இவரின் குடும்ப புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகியுள்ளது.
