LATEST NEWS
40 வயதிலும் குறையாத அழகு.. ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ். தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
சின்னத்திரையில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சீரியல் அல்லது சினிமா என்ற ஒரு நிலை வந்த போது சுஜிதா சீரியலை தேர்வு செய்தார்.
இவர் பல சீரியல்களிலும் நடித்துள்ள நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் கதை கேளு கதை கேளு என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார்.
40 வயதாகும் சுஜிதா இன்னும் அதே இளமையுடனும் பொலிவுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.