ஷூட்டிங் ஸ்பாட்டில் தினமும் அழுவேன்… குழந்தையை தத்தெடுக்க காரணம் இதுதான்… முதன்முறையாக நடிகை அபிராமி ஓபன் டாக்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷூட்டிங் ஸ்பாட்டில் தினமும் அழுவேன்… குழந்தையை தத்தெடுக்க காரணம் இதுதான்… முதன்முறையாக நடிகை அபிராமி ஓபன் டாக்…

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. இவர் கமல், பிரபு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி.

இதை தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி ,தமிழில் அர்ஜுன் நடித்த ‘வானவில்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். குறிப்பாக இவர் தமிழில் நடித்த சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Advertisement

நடிகை அபிராமி 2014ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே திரைப்படம் மூலம் திரையுலகில் ஒரு ரீ என்ட்ரி கொடுத்தார். 40 வயது ஆகும் நடிகை அபிராமி மற்றும் அவரது கணவர் ராகுல் இருவரும் சேர்ந்து கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதைத்தான் அவர் செய்ததாகவும்,  குழந்தைக்கு கல்கி என்று பெயர் வைத்திருப்பதாகவும் பேட்டியில் கூறியிருந்தார் அபிராமி.

மேலும், அவர் அந்த பெட்டியில் ‘ஆர் யூ ஓகே பேபி’ படத்தில் நடித்தது குறித்த அனுபவம் குறித்தும் கூறியிருந்தார்.  அதில் ‘ஆர் யூ ஓகே பேபி படத்தின் கதையை லட்சுமி மேடம் என்னிடம் சொல்லும் போது ரொம்பவும் உணர்ச்சி பூர்வமாக இருந்ததால், நடிக்க ஒத்துக்கொண்டேன். ஒரு குழந்தையை தத்து எடுப்பதால் அந்த குடும்பத்தினரின் மனவலியை சொல்லும் கதை என்பதால், அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது தினமும் அழுதுக் கொண்டே இருப்பேன்’ என்று மனம் திறந்து பேட்டியளித்துள்ளார் நடிகை அபிராமி

Advertisement
Continue Reading
Advertisement