‘என்னால வாழவே முடியாதா? அப்படின்னா என்ன கொன்னுடும்மா’… ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக நடிகர் மாரிமுத்து கடைசியாக பேசிய டயலாக்… வைரலாகும் வீடியோ… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘என்னால வாழவே முடியாதா?  அப்படின்னா என்ன கொன்னுடும்மா’… ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக நடிகர் மாரிமுத்து கடைசியாக பேசிய டயலாக்… வைரலாகும் வீடியோ…

Published

on

எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோதே அவருக்கு அசௌகரியமாக இருந்ததால் அவர் வெளியே வந்தார். அங்கிருந்த நடிகர் கமலேஷ் கேட்டபோது தனக்கு அசௌகரியமாக இருக்கிறது எனவும், வேறு ஒன்றும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

யாருடைய உதவியையும் கேட்காமல் நடிகர் மாரிமுத்து தானாகவே கார் ஓட்டி அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனை பார்க்கிங் ஏரியாவில் நிலைதடுமாறிய மாரிமுத்துவுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்தார் நடிகர் மாரிமுத்து.

Advertisement

அவரின் திடீர் மறைவு இதுவரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனையடுத்து சின்னத்திரை பிரபலங்கள், திரையுலகினர் பலரும் மாரிமுத்துவின் மறைவிற்கு தற்பொழுது வரை அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது ஊரில் நேற்றைய தினம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஸ்டுடியோவை விட்டு வெளிய வந்து மருத்துவமனை செல்ல மாரிமுத்துவே காரை ஓட்டி செல்லும் சிசிடிவி காட்சிகள் இடம்பெற்ற வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியது. தற்பொழுது ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக அவர் பேசிய கடைசி டப்பிங் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Chinnathirai (@chinnathiraioffl)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement