37 வயதில் காதலருடன் நெருக்கமாக பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

37 வயதில் காதலருடன் நெருக்கமாக பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சினிமாவில் பாடகையாக அறிமுகமான நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். அதனை தொடர்ந்து நடிப்பில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்த இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர்.

ஆனால் சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். அதன்படி தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணா நடித்த வீரசிமா ரெட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல ஹிட் கொடுத்துள்ளதால் ஸ்ருதிஹாசன் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார்.

Advertisement

இந்நிலையில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி 37 வயதை எட்டியுள்ள ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனு மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடியுள்ளார். அப்போது தனது காதலருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in