சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சிவகார்த்திகேயன் அவரின் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

சிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் மூலவர் சன்னதி,சண்முகர் சன்னதி மற்றும் பெருமாள் சன்னதி ஆகிய சுவாமிகளை தரிசனம் செய்தார்.

அதனை தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் ரசிகர்கள் அனைவரும் சூழ்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

அப்போது ரசிகர்கள் செல்பி எடுக்கவும் சிவகார்த்திகேயனை பார்க்கவும் ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தற்போது சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.