“எல்லாத்தையும் கொன்னுட்டா சார்” பெற்ற தாயை டீசல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய மகன்… திடுக்கிடவைக்கும் பகீர் வாக்குமூலம்..!!! – cinefeeds
Connect with us

CRIME

“எல்லாத்தையும் கொன்னுட்டா சார்” பெற்ற தாயை டீசல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய மகன்… திடுக்கிடவைக்கும் பகீர் வாக்குமூலம்..!!!

Published

on

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் எல்லுபேட்டாகிராமத்தில், பில்லி சூனிய மூடநம்பிக்கை காரணமாகப் பெற்ற தாயையே மகன் தீவைத்து எரித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான கரெ சையம்மா (40) என்ற பெண்மணி, கடந்த சனிக்கிழமை அன்று அவரது வீட்டில் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது விபத்து என நினைத்த நிலையில், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் அவரது மூத்த மகனான கரெ துர்கேஷ் (21) என்பவரே சையம்மாவைத் திட்டமிட்டுப் படுகொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

ஐதராபாத்தில் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த துர்கேஷ், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பத்து நாட்களுக்கு முன்புதான் அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சில மர்ம மரணங்களுக்குத் தனது தாய் செய்த பில்லி சூனியமே காரணம் என அவர் தீவிரமாகச் சந்தேகிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த துர்கேஷ், தனது ஆட்டோவில் இருந்து டீசலை எடுத்துத் தாய் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் கடுமையான தீக்காயமடைந்த சையம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இந்தக் கொடூரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த தேக்மால் மற்றும் அல்லாதுர்க் (Alladurg) காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சையம்மா பில்லி சூனிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும், கிராம மக்கள் யாரும் அவர் மீது அத்தகைய குற்றச்சாட்டை வைக்கவில்லை என்றும் காவல்துறை அதிகாரி ரேணுகா தெரிவித்துள்ளார். முற்றிலும் மூடநம்பிக்கை மற்றும் தவறான சந்தேகத்தின் அடிப்படையில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ள நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளி துர்கேஷைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in