BREAKING: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. அறிவித்தது தமிழக அரசு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. அறிவித்தது தமிழக அரசு..!!

Published

on

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று, இந்த தீபாவளிப் பண்டிகை முதல் முதன்முறையாக ₹20,000 வரை வட்டி இல்லா பண்டிகை கால முன்பணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஊழியர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பண்டிகைக்கு இந்த முன்பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இது 10 மாதத் தவணைகளாக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ₹50 லட்சம் வரையிலான பிரம்மாண்ட விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பணிகளைச் சீராக மேற்கொள்ளும் வகையில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து கார்ப்பரேட் ஊதிய பேக்கேஜ் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கியில் சம்பளக் கணக்கு தொடங்கும் ஊழியர்களுக்குப் பல்வேறு சலுகைகளுடன் இந்த விபத்துக் காப்பீட்டு வசதிகளும் கிடைக்கப் பெறும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 22,877 டாஸ்மாக் சில்லறை விற்பனைக்கடை ஒப்பந்த ஊழியர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in