CRIME
“நாலு பேர் சேர்ந்து கெடுத்து” என் பிள்ளை செத்துப்போச்சே… அழுது நாடகமாடிய தந்தை… பிரேத பரிசோதனையில் தெரிய வந்த திடுக்கிடும் உண்மை… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த பாலக்கோட் பகுதியைச் சேர்ந்த சைத்து ஓரான் என்ற நபர், செப்டம்பர் 25 அன்று தனது மகளை சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மயக்க நிலையில் வீட்டின் முன் வீசிச் சென்றதாகக் காவல்துறையிடம் புகார் அளித்தார். படுகாயமடைந்த அந்தச் சிறுமி ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 26 அன்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மருத்துவப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பதும், கழுத்து எலும்பு முறிவடைந்ததால் உயிரிழந்தார் என்பதும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் சிறுமியின் தந்தை சைத்து ஒரானைப் பிடித்துக் தீவிர விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில், வீட்டு வேலை செய்யுமாறு கண்டித்தபோது சிறுமி எதிர்த்துப் பேசியதால் ஆத்திரமடைந்து, அவரே மகளின் கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.
தன் மீதான குற்றத்தை மறைக்கவும், காவல்துறையையும் ஊர்க்காரர்களையும் திசைதிருப்பவும், சிறுமியை யாரோ கடத்திச் சென்று கூட்டாளிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பொய்க் கதையைக் கட்ட அவிழ்த்துவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, சொந்த மகளையேக் கொலை செய்து, காவல்துறையை ஏமாற்ற முயன்ற குற்றத்திற்காகக் கொடூரத் தந்தையை கும்லா மாவட்டக் காவல்துறையினர் முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
