LATEST NEWS
சாமி கும்பிட போன இடத்துல இப்படியா..? நவராத்திரி பந்தலில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் துடிதுடித்து பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள துர்கா தேவி வழிபாட்டு பந்தலில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஜான்பூரின் கேராகத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடஹ்ரா கிராமத்தில் நடந்த நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் மாலை ஆரத்தியின் போது இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவிழா பந்தலில் விளக்கு வெளிச்சத்திற்காக தற்காலிக மின்சார ஒயர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த மின்சார ஒயர் பந்தலில் இருந்த இரும்புத் தூண் ஒன்றின் மீது உரசியதால், தூண் முழுவதும் மின்சாரம் பாய்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மாலை நேர வழிபாட்டின் போது அங்கு நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவன், எதிர்பாராதவிதமாக அந்த இரும்புத் தூணைப் பிடித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
இந்தக் கொடூர சம்பவத்தை அடுத்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் சாமுவேல் பால் என், மாவட்டத்தில் உள்ள அனைத்து துர்கா பந்தல்களிலும் தீயணைப்பு மற்றும் மின்சாரப் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இரண்டு நாட்களுக்குள் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், முறையான தடையில்லா சான்றிதழ் இல்லாமல் எந்தவொரு பந்தலும் செயல்படக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் தகுந்த நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்
