அதிர்ச்சியில் தமிழகம்.. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்ககில் லாரி மீது ஏறி நின்று சுட்ட முக்கியக் காவலர் ராஜா திடீர் மரணம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ச்சியில் தமிழகம்.. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்ககில் லாரி மீது ஏறி நின்று சுட்ட முக்கியக் காவலர் ராஜா திடீர் மரணம்..!!

Published

on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த வழக்கில் மிக முக்கிய நபரான காவலர் ராஜா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வன்முறையின் போது, காவல்துறையினரின் லாரி மீது ஏறி நின்றபடி, கலைந்து ஓடிய போராட்டக்காரர்களை நோக்கி இவர் துப்பாக்கியால் குறிபார்த்துச் சுடுவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம், தனது விசாரணை அறிக்கையில் காவலர் ராஜாவின் இந்தத் துப்பாக்கிச்சூடு நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து, முக்கிய ஆதாரமாகப் பதிவு செய்திருந்தது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த எந்தவொரு முகாந்திரமும் இல்லாத சூழலில், லாரியின் மீது ஏறி நின்று மிகத் துணிச்சலாக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது சட்டவிரோதமானது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் துயரச் சம்பவம் நடந்து 8 ஆண்டுகளைக் கடந்தும், சிபிஐ விசாரணை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் இன்னும் ஒரு இறுதி முடிவுக்கு வராமல் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், துப்பாக்கிச்சூடு வழக்கின் மிக முக்கிய சாட்சியமாகவும், குற்றச்சாட்டுகளின் மையப்புள்ளியாகவும் இருந்த காவலர் ராஜாவின் திடீர் மரணம், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளில் பெரும் தொய்வை ஏற்படுத்துமோ என்ற விவாதத்தையும், தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in