LATEST NEWS
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த அரங்கையும் கலங்க வைத்த பார்வையற்ற சிறுமி… பாடகி சித்ரா கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்… வைரல் வீடியோ..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சிறுவர்களின் அறிமுகம் என் குரலின் கதை என்ற தலைப்பில் வீடியோவாக வெளியாகி மக்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் சிறுமிகள் பலரும் தங்களின் திறமையை மிக அழகாக வெளிக்காட்டி வரும் நிலையில் புரோகிதா என்ற பார்வையற்ற திரும்பி ஒருவர் ஒட்டுமொத்த அரங்கையும் கலங்க வைத்துள்ளார்.
அவர் பாடிய வழிநெடுக காட்டு மல்லி பாடல் அனைத்து நடுவர்கள் மட்டுமல்லாமல் அரங்கத்தில் இருந்த பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்தது. மேலும் பாடகி சித்ரா அந்த சிறுமியை மகிழ்விப்பதற்காக அவருக்கு பொம்மை கொடுத்ததுடன் அவருடன் அமர்ந்து புகைப்படம் எடுத்த நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
