காதலியாக சூர்யாவுடன் நடிகை ஜோதிகா.. 20 வருடங்களுக்கு முன்பு எடுத்த பலரும் பார்க்காத அரிய புகைப்படம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

காதலியாக சூர்யாவுடன் நடிகை ஜோதிகா.. 20 வருடங்களுக்கு முன்பு எடுத்த பலரும் பார்க்காத அரிய புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி காதல் ஜோடிகளாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இதனிடையே திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்ட ஜோதிகா மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளார். தொடர்ந்து சூர்யாவும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காக்க காக்க. இந்த திரைப்படம் வெளியாகி இந்த வருடத்துடன் 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இப்படத்தின் இசை மற்றும் எடிட்டிங் என அனைத்தும் இன்றளவும் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது. இந்த படத்தில் சூர்யா ஏசிபி என்ற அன்பு செல்வன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்நிலையில் காக்க காக்க திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய எல்லாவற்றையும் கொடுத்த படம். அன்புச்செல்வன் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பார்.

காக்க காக்க படத்தின் இளம் கன்றுகளாக தொழில்நுட்ப கலைஞர்கள், இந்த திரைப்படம் தொடர்பாக என்னிடம் முதலில் பேசிய ஜோதிகா என்னுடைய சக நடிகர்கள் மற்றும் கௌதம் மேனன் ஆகியோருக்கு நன்றி என குறிப்பிட்டு நினைவுகளை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in