அன்னைக்கு நைட் 3 மணிக்கு என்னால அழ முடியாதுன்னு சொன்னேன், ஆனா இன்னைக்கு.. நடிகை ஜோதிகா எமோஷனல் ஸ்பீச்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

அன்னைக்கு நைட் 3 மணிக்கு என்னால அழ முடியாதுன்னு சொன்னேன், ஆனா இன்னைக்கு.. நடிகை ஜோதிகா எமோஷனல் ஸ்பீச்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே சமயம் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் மலையாள மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் ஜோதிகா தனது கணவருடன் மும்பையில் தனியாக வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.

Advertisement

இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கமலுடன் நடிக்கும் போது ஒரு சீனில் ஏர்போர்ட்டில் அதிகாலை 3 மணிக்கு அழவேண்டும் என்று கூறினார்கள். அப்போது கட்டாயம் மூன்று மணிக்கு எல்லாம் எனக்கு கண்ணீர் வராது அப்போதெல்லாம் நடிக்க முடியாது என கூறினேன். ஆனால் அதன் பிறகு குடும்பம் மற்றும் குழந்தைகள் என வந்த பிறகு எப்படிப்பட்ட சீனிலும் எந்த ஒரு இடத்திலும் நேரம் காலம் பார்க்காமல் கண்களில் இருந்து தானாக கண்ணீர் வந்து விடுகிறது என்று ஜோதிகா பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in