“இனிமே என்னால வாழ முடியாது”.. பக்கத்து வீட்டுக்காரன் பண்ற அசிங்கமான செயல்.. கான்பூர் பெண்ணின் கண்ணீர் வீடியோ! பதறும் இணையம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனிமே என்னால வாழ முடியாது”.. பக்கத்து வீட்டுக்காரன் பண்ற அசிங்கமான செயல்.. கான்பூர் பெண்ணின் கண்ணீர் வீடியோ! பதறும் இணையம்…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பர்ரா-2 பகுதியில் வசிக்கும் பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது அண்டை வீட்டுக்காரரான சுஷில் குமார் கட்டியாரின் மகன் நைதிக் கட்டியார் என்பவருக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வாலிபர் தன்னை நீண்டகாலமாகப் பின்தொடர்ந்து, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும், இதனால் தான் தினந்தோறும் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் அந்தப் பெண் அந்த வீடியோவில் கண்ணீருடன் விவரித்துள்ளார்.

தான் வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும்போதோ அல்லது கீழே இறங்கி வரும்போதோ நைதிக் கட்டியார் ஆபாசமான சைகைகள் செய்வதாகவும், விசில் அடித்து பால்கனி கைப்பிடியைத் தட்டித் தொந்தரவு செய்வதாகவும் பூமி சிங் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தான் மிதிவண்டியில் வெளியே செல்லும் போதெல்லாம் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து, வழியில் நிறுத்தி வாக்குவாதம் செய்ய முயல்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அந்த வாலிபரின் பெற்றோரிடம் பூமியும் அவரது தாயும் புகார் அளித்தும், அவர்கள் பூமியின் குடும்பத்தினரையே அவதூறாகப் பேசி அனுப்பியுள்ளனர்.

Advertisement

அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு அந்தப் பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த வைரல் வீடியோ குறித்து கான்பூர் நகர் காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். பர்ரா காவல் நிலையத்தில் இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in