LATEST NEWS
காலையிலேயே பரபரப்பு.! “கூட்டணியில் இல்லை.. தமிழக அரசியலில் மெகா திருப்பம்”..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் ஒரு குழப்பமான சூழல் நீடித்து வருகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைத்ததாலேயே, தவெக கூட்டணியில் விசிக இணைந்துவிட்டதாகக் கூறிவிட முடியாது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் பேசியுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், விசிக அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதால் அது தவெக கூட்டணியின் ஒரு அங்கம்தான் என்று கூறியுள்ளார். இவர்களின் இந்த முரண்பட்ட கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள். திருமாவளவனின் தற்போதைய இந்த கருத்து, தவெக கூட்டணியில் ஒரு புதிய திருப்பத்தையும் அரசியல் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
