VIDEOS
கோவிலில் இப்படியா?… நடிகர் யோகி பாபு சந்தித்த அவமானம்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகி பாபு. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அந்தப் படத்திற்கு பிறகு தான் பாபு என்ற தனது பெயரை யோகி பாபு என மாற்றிக்கொண்டார்.
திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மான் கராத்தே மற்றும் யாமிருக்க பயமே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். குறிப்பாக காக்கா முட்டை என்ற திரைப்படம் தான் இவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தனியாக பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் யோகி பாபு கோவிலுக்கு சென்று இருந்த போது அவர் தீண்டாமையை சந்தித்தார் என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. கோவிலில் ஒருவருக்கு யோகி பாபு கை கொடுக்க வரும் நிலையில் அதை மறுத்து விட்டு அந்த நபர் கையை மட்டும் காட்டுகின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தீண்டாமை ஒரு பாவச்செயல்.😷 pic.twitter.com/LYnz0e5sZE
— ரத்தினவேல் மரைக்காயர் (@Pothumda) August 6, 2023
