LATEST NEWS
“இது தான் ஆசிரியரின் வருமானம்!”.. 14,000 அடி உயரத்தில் ராணுவ உடையில் நின்ற மாணவன்… உறைந்து போன ஆசிரியர்.. இணையத்தை உலுக்கும் நெகிழ்ச்சி வீடியோ.!!
ஆசிரியர் தொழிலின் உண்மையான மதிப்பு மற்றும் வருமானம் என்ன என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா மலைப்பகுதியில், ஆசிரியை ஒருவர் தன்னிடம் படித்து, தற்போது நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரராகப் பணியாற்றும் தனது முன்னாள் மாணவரை எதிர்பாராதவிதமாகச் சந்தித்துள்ளார். “ஆசிரியர் வேலையில் என்ன வருமானம் கிடைக்கிறது என்று கேட்பவர்களுக்கு இதுவே நான் சம்பாதித்த உண்மையான தொகை” என்று அந்த ஆசிரியை பெருமையுடனும் நெகிழ்ச்சியுடனும் அக்காணொளியில் குறிப்பிடுகிறார்.
அப்பகுதியில் நிலவும் கடினமான சூழ்நிலையிலும், அந்த ராணுவ வீரர் தனது ஆசிரியரை அடையாளம் கண்டு அன்போடு பேசியது அக்காணொளியின் சிறப்பம்சமாகும். பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ஆசிரியை, “பள்ளியில் நான் உன்னைக் கண்டித்ததற்காக என்னை மன்னித்துவிடு, என்னைப்பற்றி உனக்கு என்ன நினைவிருக்கிறது?” என்று கேட்க, அதற்கு அந்தச் சிப்பாய் புன்னகையுடன் “உங்களின் கண்டிப்புதான்” என்று பதிலளிக்கிறான். ஒரு ஆசிரியரின் கண்டிப்பு மாணவனை எவ்வளவு உயர்ந்த நிலைக்குக் கொண்டு சேர்த்துள்ளது என்பதையும், ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த வருமானம் அவர்களின் மாணவர்களின் வெற்றியே என்பதையும் இந்த நெிகழ்வு அழகாக விவரிக்கிறது.
