விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து இவருக்கு திரை உலகில் பல பாடல்களைப் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் சென்றும் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை கச்சேரியில் பாடி அசத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற வாயா சாமி என்ற பாடலை தமிழில் ராஜலட்சுமி பாடி அசத்தார்.

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இருளி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்கள்.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக பலம் வரும் இவர்கள் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் செந்தில் மற்றும் ராஜலட்சுமியின் கலக்கலான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.