‘சூரரைப்போற்று’ நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம்… சர்ப்ரைஸ் செய்த நண்பர்கள்… வெளியான புகைப்படங்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சூரரைப்போற்று’ நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம்… சர்ப்ரைஸ் செய்த நண்பர்கள்… வெளியான புகைப்படங்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்ணா  பாலமுரளி. இப்படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க பல படங்களில் நடிக்க தொடங்கினார். மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் அதிகம் வரவேற்கப்பட்டது. இத்திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.இத்திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்று குவித்தது. இதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகி ஆகவும் விளங்கி வருகிறார்.

Advertisement

‘மகேசிண்ட பிரதிகாரம்’ என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும், ‘சண்டே ஹாலிடே’ என்ற படத்தில் அனு என்ற கதாபாத்திரத்திலும் நடித்து மலையாள திரை உலகில் பிரபலமானார்.

இவர் கேரளாவில் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர். கே பி பாலமுரளி மற்றும் சோபா முரளி ஆகியோருக்கு பிறந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். 

Advertisement

தற்பொழுது நடிகை அபர்ணா பாலமுரளி தனது நண்பர்களுடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.  இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement