‘என்ன என்ன அயிட்டங்களோ? நடிகர் அசோக் செல்வன் திருமணத்திலே’… பாயசம் முதல் அல்வா வரை வைரலாகும் லிஸ்ட் இதோ… - Cinefeeds
Connect with us

CINEMA

‘என்ன என்ன அயிட்டங்களோ? நடிகர் அசோக் செல்வன் திருமணத்திலே’… பாயசம் முதல் அல்வா வரை வைரலாகும் லிஸ்ட் இதோ…

Published

on

‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார் அசோக் செல்வன்.

கடந்தாண்டில் அதிக தமிழ் படங்களில் நடித்த ஹீரோவும் அசோக் செல்வன் தான். 2022-ம் ஆண்டில் மட்டும் இவர் ஹீரோவாக நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர்களை கொண்ட படமாகும்.

தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வமும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கீர்த்தி பாண்டியன் தும்பா மற்றும் அன்பிற்கினியால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பா ரஞ்சித் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் நடித்துவரும் நிலையில் அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் இன்று திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள இன்டெரியில் நடந்து முடிந்துள்ளது.இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்தில் கொடுக்கப்பட்ட விருந்தின் மெனு லிஸ்ட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த லிஸ்ட்…

1.மேங்கோ ஸ்வீட் பொங்கல்
2.இருட்டுக்கடை அல்வா
3.இளநீர் புட்டிங்
4.நார்த்தங்காய் இஞ்சி பச்சடி
5.வெண்டைக்காய் தயிர் பச்சடி
6.மரவள்ளி கிழங்கு வடை
7.பருத்திப்பால் பாயாசம்
8.பீட்ரூட் சந்தகை – மாப்பிள்ளை சொதி
9.பலாகாய் கறி – வாழக்காய் பூரி
10.இட்லி
11.நீர் தோசை
12.ராகி அடை
13.திணை பொங்கல்
14.கதம்ப சாம்பார்
15.தேங்காய் சட்னி
16.நெல்லிக்காய் சட்னி
17.கொள்ளு சட்னி
18.புளி மிளகாய்
19.கிடரங்காய் தொக்கு

இந்த லிஸ்டை பார்த்த ரசிகர்கள் ‘என்ன என்ன அயிட்டங்களோ’ என்று நாக்கில் எச்சில் ஊற கமெண்ட் செய்து வருகின்றனர்.