CRIME
“இளைஞர்களைச் சீரழிக்கும் புதிய ஆன்லைன் போதை..!’ சோஷியல் மீடியாவில் பரவும் ‘மேனோஸ்பியர்’ ஆபத்து.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் ‘மேனோஸ்பியர்’ என்ற ஆபத்தான தத்துவம், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் மனநலனுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, பெண்களின் சுதந்திரம் மற்றும் பெண்ணியக் கருத்துகளால் ஆண்கள் அநீதியாக நடத்தப்படுகிறார்கள் என்ற தவறான பிரச்சாரத்தை இந்த ஆன்லைன் குழுக்கள் பரப்பி வருகின்றன. லான்செட் மருத்துவ இதழின் புதிய அறிக்கையின்படி, இந்தத் தீவிரப் பிரச்சாரம் ஒட்டுமொத்த பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகப் பார்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தவறான தத்துவப் போக்கால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் சிந்தனைத் திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெண்களுக்கு எதிரான வெறுப்புணர்வும் வன்முறைகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடும் ஆண்களைக்கூட இந்த ஆன்லைன் குழுக்கள் தங்களின் தவறான சித்தாந்தத்தின் மூலம் பின்னோக்கி இழுப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. எனவே, சமூக ஊடகங்களின் ஒரு சாதாரண பிரச்சினையாக இதைக் கடந்து செல்லாமல், விரிவான பொதுச் சுகாதாரக் கண்ணோட்டத்துடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் இந்த மேனோஸ்பியர் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
