ஆத்தாடி..! இளைய ஹீரோவோடு நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்ட நயன்…. கடைசியில இப்படி ஆகிடுச்சே…!! - cinefeeds
Connect with us

CINEMA

ஆத்தாடி..! இளைய ஹீரோவோடு நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்ட நயன்…. கடைசியில இப்படி ஆகிடுச்சே…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் சில பல பிரபலங்களோடு சர்ச்சையில் சிக்கினாலும் தற்போது சந்தோஷமாக குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது எல்லாம் சரியாகிவிட்டது. தற்போது படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

அந்தவகையில் தற்போது அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், டாடா படத்தின் ஹீரோ கவினுக்கு ஜோடியாக நயன்தாரா புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க நயன்தாரா 20 கோடி ரூபாய் கேட்டதாகவும், அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில் படம் தொடங்கட்டும், அதன்பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனை கேட்டு அந்த படத்தில் ஒரு வாரம் நயன்தாரா நடித்த நிலையில், அவர் கேட்ட சம்பளத்தில் பாதியை மட்டுமே கொடுக்க முடியுமென கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement