CRIME
கள்ளக்காதலனுடன் சொகுசு வாழ்க்கை.. கணவனின் ‘அந்த’ ஒரு சோசியல் மீடியா பதிவு… 22 வயது அஞ்சலியின் மரணத்திற்கு பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை..!!
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலி தாப்பா (22), தனது கணவர் மற்றும் மகனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் இந்தூரில் தங்கியிருந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நொய்டாவில் கணவருடன் வாழ்ந்து வந்த அஞ்சலிக்கு, மீரட்டைச் சேர்ந்த அஜய் முண்டே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் கணவரைப் பிரிந்து அஜயுடன் இந்தூர் வந்த அஞ்சலி, அங்குள்ள பலாஷ் வளாகத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். சம்பவத்தன்று இருவரும் மது அருந்திக்கொண்டிருந்த போது, மதியம் 12 மணியளவில் அஞ்சலி திடீரென பால்கனியில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அஞ்சலியின் இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், அவரது கள்ளக்காதலன் அஜய்யை இந்தூர் போலீசார் தற்காப்புக் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அஞ்சலியின் கணவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு பதிவு அஞ்சலிக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. இந்த மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பால்கனியில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
