CINEMA
குடிச்சி குடிச்சி உயிரே போச்சு….. 2-வது வந்தவரும் ஏமாத்திட்டாரு…. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த சின்னத்திரை நடிகை..!!
சின்னத்திரையில் எங்கள் அண்ணா, இனியா, சின்ன மருமகள் போன்ற பல சீரியல்களில் நடித்து வருபவர்தான் நடிகை பானுமதி. இவர் சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து முதன்முதலில் பேசி ஒன்றில் பகிர்ந்துள்ளா.ர் அதில் அவர் எனக்கு டான்ஸ் மாஸ்டர் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. 16 வயதில் திருமணமானது. 10 வருடம் என் வாழ்க்கை நன்றாக சென்றது.
இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். அதிகம் குடித்து வந்தவர் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்துவிட்டார். ஆனால் என்னுடைய கணவர் வீட்டில் நான் தான் அவரை கொன்றேன் என்று சொன்னார்கள். அதனால் அவர்கள் உறவே வேண்டாம் என்று என் அம்மா அப்பாவுடன் வந்துவிட்டேன். குடும்பத்திற்காகவும் அவர்களின் சாப்பாட்டிற்காகவும் சினிமாவில் துணைநடியாக 500 ரூபாய்க்கு நடிக்க வந்தேன். குழந்தைகளுக்காக மீண்டும் இரண்டாம் திருமணம் செய்தேன். அந்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. அதனால் குடும்பத்திற்காக ஓடினேன். பிள்ளைகளை நல்லபடியாக படிக்க வைத்தேன் என்று பேசி உள்ளார்.