CINEMA
அடக்கடவுளே…! கல்யாணத்திற்கு காசு இல்லாமல் திண்டாடும் பிரதீப்…. என்ன சொன்னார் தெரியுமா..??
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தான் பிரதீப் ஆண்டனி. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் மீது பெண்கள் இருக்கும் இடங்களில் மோசமாக நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் ரெட் கார்ட் கொடுத்த்து வெளியே அனுப்பப்பட்டார். ஆனால் குற்றச்சாட்டை விசாரிக்காமல் பெண்களுக்கு ஆதரவு கொடுத்து கமலஹாசன் முடிவு எடுத்த காரணத்தினால் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்த நிலையில் வெளியேறிய பிரதீப் ஆதரவாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அன்று முதல் இன்று வரை என்ன செய்தாலும் அவர் இணையத்தில் வைரலாகி வருகிறார். அந்த வகையில் பிரதீப் ஆண்டனிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது . அதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, எனக்கு எல்லாம் கல்யாணம் நடக்காது என்று நினைத்தேன். பரவாயில்லை என்னை நம்பி பொண்ணு கொடுத்து விட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது திருமணம் குறித்த கேள்விக்கு, காசு சேர்த்து வைத்த பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வேன் இந்த முடிவில் நான் உறுதியாக உள்ளேன் என்று கூறியுள்ளார் பிரதீப்.