“என்ன கொடுமை சார் இது..?!” சாலையில் சிதறிக் கிடந்த ‘அந்த’ தாள்கள்.. வாகன ஓட்டிகள் இறங்கிப் பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்ன கொடுமை சார் இது..?!” சாலையில் சிதறிக் கிடந்த ‘அந்த’ தாள்கள்.. வாகன ஓட்டிகள் இறங்கிப் பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!

Published

on

ஹைதராபாத்தில் உள்ள பி.வி.என்.ஆர் எக்ஸ்பிரஸ்வேயில் சிவராம்பள்ளி முதல் ஆராம்கர் சுரங்கப்பாதை வரை அசல் ஓ.எம்.ஆர் தாள்கள் நடுரோட்டில் சிதறிக் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விடுதி நல அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுக்குரிய OMR தாள்கள் என அடாாளம் காணப்பட்டுள்ளன. தேர்வர்களின் பெயர்கள், ஹால் டிக்கெட் எண்கள், வினாத்தாள் குறியீடு மற்றும் கண்காணிப்பாளர்களின் கையொப்பம் கொண்ட இந்தத் தாள்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், அவற்றைச் சேகரித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த OMR தாள்களைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தெலுங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நிர்வாகக் குளறுபடியை அம்பலப்படுத்தியுள்ளது.

నడిరోడ్డుపై కుప్పలుగా పడ్డ ఒరిజినల్ ఓఎంఆర్ షీట్లు

బయటపడిన టీజీపీఎస్సీ పరిపాలన వైఫల్యం

పీవీఎన్ఆర్ ఎక్స్‌ప్రెస్‌వేపై శివరాంపల్లి నుంచి అరంఘర్ అండర్‌పాస్ వరకు కుప్పలుగా పడ్డ ఓఎంఆర్ షీట్లు

2018లో వసతి గృహ సంక్షేమాధికారి పోస్టుల భర్తీకి నిర్వహించిన పరీక్షలకు సంబంధించిన ఓఎంఆర్… pic.twitter.com/iPsF42TsBX— Telugu Scribe (@TeluguScribe) July 27, 2026

பொதுவாகத் தேர்வுகள் முடிந்த பிறகு, OMR தாள்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பின்னரே மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், அந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல், முழுத் தாள்களையும் அப்படியே மறுசுழற்சிக்காக விஜயவாடாவுக்கு எடுத்துச் சென்றபோது, வாகனத்திலிருந்து அவை சாலையில் சிதறியதாகத் தெரியவந்துள்ளது. மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய தாள்கள் இப்படிப் பொறுப்பற்ற முறையில் சாலையில் சிதறிக் கிடந்ததைக் கண்டு தேர்வர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட எஸ்பி-க்கு TGPSC உத்தரவிட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில், அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in