“என் அவனோட சேர்த்து வைங்க… இல்லன்னா இறங்கமாட்டேன்.. செல்போன் டவரில் விறுவிறுவென ஏறி இளம்பெண் செய்த காரியம்.. கடைசியில் நடந்த நடந்த சம்பவம் தான் ஹைலைட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் அவனோட சேர்த்து வைங்க… இல்லன்னா இறங்கமாட்டேன்.. செல்போன் டவரில் விறுவிறுவென ஏறி இளம்பெண் செய்த காரியம்.. கடைசியில் நடந்த நடந்த சம்பவம் தான் ஹைலைட்..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் பக்ரைச் பகுதியை சேர்ந்தவர் சைதா (வயது 18). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த நூருதீன் (21) என்ற வாலிபரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். நூருதீன் தற்போது வேலை நிமித்தமாக மும்பையில் வசித்து வருகிறார். அவர்கள் இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலரை கரம்பிடிக்க முடியாதோ என்று மனமுடைந்த சைதா, தனது காதலை வெல்லவைக்க ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.

கிராமத்தில் இருந்த ஒரு உயரமான செல்போன் கோபுரத்தில் விறுவிறுவென ஏறினார். நூருதீனுடன் உடனடியாக தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். அதுவரை கீழே இறங்க மாட்டேன் என்று உரத்த குரலில் கத்தினார். தகவலறிந்து வந்த போலீசாரும், கிராம மக்களும் எவ்வளவோ கெஞ்சியும் அவர் கீழே இறங்கவில்லை. சுமார் 4 மணி நேரம் செல்போன் கோபுரத்தில் நின்றபடி அவர் போராடியதால் அந்த பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Advertisement

இதையடுத்து, போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக இளம் ஜோடியின் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர். உடனே ஒரு முஸ்லிம் மதகுரு வரவழைக்கப்பட்டு, மும்பையில் இருந்த நூருதீனுடன் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் ஆன்லைனிலேயே இருவருக்கும் திருமண சடங்குகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. இதனால் தனது காதல் திருமணம் உறுதியான நிம்மதியுடன் புதுப்பெண்ணாக சைதா கீழே இறங்கினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in