LATEST NEWS
என்னது… இனி Gpay, PhonePe பயன்படுத்தினால் கட்டணமா..? மத்திய அரசின் புதிய பிளான்..!!
கூகுள் பே, போன்பே போன்ற UPI செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய விதிமுறை டிஜிட்டல் பணப் பரிமாற்ற அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்த புதிய கட்டண முறையின்படி, ஒரு கடையில் ரூ.10,000 மதிப்பிலான வர்த்தகம் அல்லது பணப் பரிவர்த்தனை நடந்தால், அதற்கு ரூ.5 முதல் ரூ.7 வரை அந்தக் கடை உரிமையாளரிடம் கட்டணமாக வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது வியாபார ரீதியிலான பெரிய பரிவர்த்தனைகளை இலக்காகக் கொண்டு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வியாபாரிகளுக்குக் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டாலும், சாதாரண பொதுமக்களுக்கு இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் எந்தவொரு கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது என்று கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் வழக்கம் போல் எந்தவொரு கட்டணமும் இன்றி UPI செயலிகளைப் பயன்படுத்தலாம்.
