LATEST NEWS
“யாரும் எதிர்பாராத திருப்பம்”.. இடைத் தேர்தலுக்கு சீமான் எடுத்த ‘அல்டிமேட்’ முடிவு.. அலறும் ஆளுங்கட்சி கூடாரம்.. அதிரும் அரசியல் களம்..!!
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து முக்கியக் குறிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். மேடையில் பேசிய அவர், “நான் ஒன்றும் மன்னனோ அல்லது மந்திரி மகனோ இல்லை, கூப்பிட்டவுடன் கூட்டம் வருவதற்கு; ஆனாலும், தோற்றுப்போனாலும் 20 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள்” என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும், அண்மையில் இயக்குநர் பாரதிராஜாவின் இல்லச் சடங்கு ஒன்றிற்குச் சென்றபோது, அங்குள்ள பெரியவர் ஒருவர் தன்னிடம் பேசிய நெகிழ்ச்சியான சம்பவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அந்தப் பெரியவர் சீமானிடம், “மகனே, குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களோடாவது நீ சட்டமன்றம் செல்வாய் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை; எனினும் சோர்வடைந்துவிடாதே, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு நீ சட்டமன்றத்திற்குள் நுழைந்தே தீர வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். அதற்குத் தான் சிரித்துக்கொண்டே ‘உறுதியாகப் போகிறேன்’ என்று பதிலளித்ததாகவும், அதற்கு அந்தப் பெரியவர் ‘இந்தச் சிரிப்போடே நீ உள்ளே போக வேண்டும்’ என்று வாழ்த்தியதாகவும் சீமான் தெரிவித்தார். இதன் மூலம், வரும் இடைத்தேர்தலில் சீமான் நேரடியாகக் களம் இறங்கிப் போட்டியிடுவது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
