மாணவர்களுக்கு குட் நியூஸ்..! இனி அலையத் தேவையில்லை.. பிணையில்லா கல்விக் கடன் கிடைக்கத் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாணவர்களுக்கு குட் நியூஸ்..! இனி அலையத் தேவையில்லை.. பிணையில்லா கல்விக் கடன் கிடைக்கத் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை..!!

Published

on

தமிழகத்தில் பொறியியல், பல்வகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்கும் நடைமுறையை எளிமையாக்கத் தமிழக அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட அளவில் இதற்கென பிரத்யேகமாக கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் மாணவர்களுக்குத் தேவையான சேவைகள் மிகவும் விரைவாகவும், எவ்வித தாமதமுமின்றியும் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

இப்புதிய திட்டத்தின் மூலம் மாணவர்கள் சமர்ப்பிக்கும் கல்விக் கடன் விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்களால் நேரடியாகவும், விரைவாகவும் பரிசீலிக்கப்படும். வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த அலுவலர்கள் செயல்படுவதால், கடன் ஒப்புதல் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பெருமளவு குறையும். இந்த எளிய மற்றும் விரைவான செயல்முறையின் மூலம் தகுதியுள்ள ஏழை, எளிய மாணவர்கள் தடையின்றி தங்களின் உயர்கல்வியைத் தொடர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in