இந்த இக்கட்டான நேரத்திலும் பெரும் உதவி செய்யும் நடிகர் ராஜ்கிரண்..! என்ன செய்திருக்கிறார் தெரியுமா..? - cinefeeds
Connect with us

Uncategorized

இந்த இக்கட்டான நேரத்திலும் பெரும் உதவி செய்யும் நடிகர் ராஜ்கிரண்..! என்ன செய்திருக்கிறார் தெரியுமா..?

Published

on

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். இதனால் பலர் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக ஆதரவற்றோர், அனாதைகள், பிச்சைக்காரர்கள், மற்றவர்களை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள், இப்படி பலரும் உணவு கிடைக்காமல் தவிர்த்துவருகின்றனர்.

இந்நிலையில், சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகள் செய்துவரும் நிலையில், நடிகர் ராஜ்கிரண் சாப்பாடு கிடைக்காமல் ரோட்டு ஓரத்திலும், பிளாட்பாரத்தில் கஷ்ப்படும் ஏழைகளுக்கு உணவு சமைத்து, அதை பொட்டலமாக கடந்த சில நாட்களாக செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ராஜ்கிரணின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement