குரங்கு குட்டியோடு செம நண்பன் ஆன நாய்குட்டி..! என்ன பாசம் பாருங்க… வீடியோ இதோ - cinefeeds
Connect with us

VIDEOS

குரங்கு குட்டியோடு செம நண்பன் ஆன நாய்குட்டி..! என்ன பாசம் பாருங்க… வீடியோ இதோ

Published

on

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கேயும் அப்படித்தான் ஒரு வீட்டில் நாய் ஒன்று குட்டி போட்டிருந்தது. அதே ஏரியாவில் கடந்த சில வாரங்களாகச் சுற்றிவந்த குரங்கும் குட்டி போட்டிருந்தது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த குட்டி நாயும், குரங்கும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர்.

Advertisement

குட்டி குரங்கும், அந்த நாயும் சேர்ந்தே தூங்குகின்றன. சேர்ந்தே விளையாடுகின்றன. இதையெல்லாம் விட உச்சமாக ஒன்றின் மேல் மற்றொன்று கை போட்டுத்தான் உறங்குகின்றன. இந்த காட்சியை யாரோ ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்துபோட அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in