சுவற்றில் ஏற முயன்ற குழந்தை… தடுத்து நிறுத்தும் பூனை.. ஐந்தறிவு ஜீவனான பூனைக்குள் இப்படியொரு பாசமா..? - cinefeeds
Connect with us

VIDEOS

சுவற்றில் ஏற முயன்ற குழந்தை… தடுத்து நிறுத்தும் பூனை.. ஐந்தறிவு ஜீவனான பூனைக்குள் இப்படியொரு பாசமா..?

Published

on

செல்லப் பிராணிகளை வளர்ப்பதை இன்று பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். அவை தங்கள் எஜமானர்களின் ஆபத்து காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களை அதில் இருந்து மீட்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

பாம்பை கடித்துக் கொன்று தானும் இறந்து போன நாய் தொடங்கி, தங்கள் உரிமையாளர்களுக்காக உயிரையே விட்ட பலரைப் பார்த்திருக்கிறோம். இங்கேயும் அப்படித்தான் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

குழந்தை ஒன்று வீட்டின் மொட்டை மாடியில் நின்று விளையாடிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் வீட்டில் ஒரு அழகான பூனைக்குட்டியும் வளர்த்து வந்தனர். அந்தப் பூனையானது, குழந்தை விளையாடுவதை அருகில் நின்று பார்த்து வந்தது.

குழந்தை திடீரென மொட்டை மாடியில் இருக்கும் கைப்பிடிச்சுவரை பிடித்து ஏற முயற்சித்தது. சின்னக்குழந்தையான அதனால் அது முடியாது எனினும் அது முயற்சித்துப் பார்த்தது. இதைப் பார்த்த பூனை எங்கே குழந்தை சுவற்றின் மேலே ஏறி கீழே விழுந்துவிடுமோ என பதட்டத்தில் தன் காலால் குழதையின் கையை எடுத்துவிடுகின்றது.

Advertisement

குழந்தையோ மீண்டும், மீண்டும் அப்படி முயற்சித்துக் கொண்டே இருக்க காலால் கையை எடுத்துவிட்டுக் கொண்டே இருந்தது பூனை.ஒருகட்டத்தில் குழந்தை வேறு இடத்துக்குப் போய் கையை வைத்து ஏற முயல பூனை அங்கும்பொய் கைகளை எடுத்து விட்டது. இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐந்தறிவு மட்டுமே கொண்ட பூனை, ஆறறிவு மனிதரைப் போல் செயல்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in