VIDEOS
தாத்தாவுக்கு வந்த திடீர் ஆசை…. நிறைவேற்றி வைத்த இளைஞர்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்..!
தாத்தாக்கள் எப்போதுமே நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தாத்தாக்களோடு நாம் இருந்த பொழுதுகள் மிகவும் மகிழ்ச்சியானவை. அந்தவகையில் எல்லாருக்குமே தாத்தாவைப் பிடிக்கும். இங்கேயும் அப்படித்தான் ஒரு இளைஞருக்கு அவரது தாத்தாவை ரொம்பப் பிடிக்கும்.
அதேபோல் முன்பெல்லாம் நாம் சின்ன வயதில் ஆசைப்பட்ட விசயங்களை தாத்தாவிடம் தான் வாங்கிக் கேட்போம். தாத்தாக்களும் அய்யோ என் பேரப்பிள்ளை ஆசைப்பட்டுவிட்டான் என வாங்கிக் கொடுப்பார்கள். இங்கே அதே போல் தன் தாத்தா செல்லமாக வளர்ந்த ஒரு இளைஞர். புதிதாக ஒரு பைக் வாங்கினார். அதைப் பார்த்ததும் அந்த இளைஞனின் தாத்தா நான் எல்லாம் ஹியர் லெஸ் ஸ்கூட்டர் தான் ஓட்டியிருக்கிறேன்.
இந்த காலத்து இளசுங்க முதுகையும் குனிஞ்சுகிட்டே எப்படித்தான் ஓட்டுறீங்களோ எனச் சொல்ல, உடனே தாத்தா நீங்களே ஓட்டுங்க என அவரது பேரன் பைக்கை கொடுத்துவிட்டார்.
கூடவே தாத்தா ஓட்டுவதை தன் நண்பர்களோடு சேர்ந்து செமையாக ரசிக்கிறார். இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.