நான் ஏன் வீட்டை விட்டு போகணும்? ‘பட்டு கிளி’ யோட செல்ல கோபத்தை பாருங்க.. என்ன அழகா தமிழ் பேசுது பாருங்க..வைரலாகும் வீடியோ.. - cinefeeds
Connect with us

VIDEOS

நான் ஏன் வீட்டை விட்டு போகணும்? ‘பட்டு கிளி’ யோட செல்ல கோபத்தை பாருங்க.. என்ன அழகா தமிழ் பேசுது பாருங்க..வைரலாகும் வீடியோ..

Published

on

ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கிளி நன்றாக பேசக் கூடியது. மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான்.

கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகையில் கிளி மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணி ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் கிளி வளர்க்கிறார். பொதுவாக கிளி மிகவும் புத்திக்கூர்மை மிக்கது. தான் வளர்க்கப்படும் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகக் கூடியதும் ஆகும். இந்த வீட்டில் பெண் சொல்லிக்கொடுத்தது போலவே நம் அழகு தமிழில் கிளி சரமாரியாகப் பேசுகிறது.

Advertisement

அந்தப் பெண் தன் கிளியிடம் குக்கூவுடன் வீட்டை விட்டு போறியா எனக் கேட்க, நான் ஏன் போகணும்? என செல்லமாக கோபப்படுகிறது. உன் பேச்சு நிறைய பேருக்கு பிடிச்சுருக்கு. எல்லாரும் பாராட்டுறாங்க பட்டு என அந்தப் பெண் சொல்ல, செம ஸ்வீட்டாக அந்த கிளி ‘தேங் யூ’ எனச் சொல்லுகிறது. இதோ நீங்களே இந்த விடியோவைப் பாருங்களேன்.

Advertisement
Continue Reading
Advertisement