VIDEOS
பைக்கில் வந்து இறங்கியதும் பாசத்தோடு கூட்டமாக ஓடி வந்த நாய்கள்.. இந்த காலத்தில் இப்படியொரு மனிதரா? மனசையே உருகவச்சிட்டாரே!..!
இப்போதெல்லாம் மனிதர்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள். அனைவருமே சுயநலம் சார்ந்தவர்களாகவும் ஆகிவிட்டார்கள். முன்பெல்லாம் மனிதர்களுக்குள் ரொம்பவும் இயல்பாக இருந்த உதவி செய்யும் குணம் இப்போதெல்லாம் ரொம்பவே குறைந்துவருகிறது.
அதுவும் கொரோனா காலமான இப்போது மருத்துவமனையில் நோயாளிகளுடன் துணைக்கு இருக்கக்கூட அச்சப்பட்டு பலரும் துணைக்குக் கூட வராத சூழல் நிலவுகிறது. இதேபோல், மனிதனை மனிதன் பார்த்தே அச்சப்படும் சூழலும் இந்த கொரோனா காலத்தில் வந்துவிட்டது.
இப்படியான சூழலுக்கு மத்தியில் ஒரு வாலிபர் இந்த கொரோனா காலத்திலும் சாலையோர நாய்களுக்காக தானே வீட்டில் உணவு தயாரித்து தனது டீவீலரின் முன்னால் வைத்துக்கொண்டு கொண்டு சென்று பரிமாறி வருகிறார்.
அவரைப் பார்த்ததுமே தெருவில் ஆங்காங்கே நிற்கும் நாய்க ஓடி வருகின்றன. வால் ஆட்டுகின்றன. அவரும் வாஞ்சையோடு நாய்க்குட்டிகளைத் தூக்கி முத்தமிட்டு தான் கொண்டு வந்த உணவினை பரிமாறிச் செல்கிறார்.
இந்த காலத்தில் இப்படியும் ஒரு இளைஞரா என இந்த வீடியோவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதோ அந்தக் காட்சியை நீங்களே பாருங்கள்.