VIDEOS
மக்களே இங்க பாருங்க….! சாக்கடை நீரில் கீரையை கழுவும் வியாபாரி….. அதிர்ச்சி வீடியோ….!!
கீரை வகை உணவுகளில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இதில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள் வைட்டமின்கள் உள்ளிட்ட பல வகையான முக்கிய சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இவ்வாறு சத்து நிறைந்ததாக காணப்படும் கீரையை நாம் மார்க்கெட்டுகளை சென்று வாங்கி வருகிறோம்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமலாபுரத்தில் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லும் கீரையை வியாபாரி ஒருவர் சாக்கடை கழிவுநீரில் கழுவும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த கீரைகள் உக்கடம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறதாம்.
உணவில் ஆரோக்கியத்திற்காக நம்மால் சேர்க்கப்படும் இந்த கீரைகள் இப்படி கழுவப்பட்டால் நோய்கள் தான் பரவும். எனவே சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.